/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மட்டத்தில் எங்களுக்கு இருவரும் தேவை பா.ம.க., கீழ்மட்ட நிர்வாகிகள் உறுதி
/
மேல்மட்டத்தில் எங்களுக்கு இருவரும் தேவை பா.ம.க., கீழ்மட்ட நிர்வாகிகள் உறுதி
மேல்மட்டத்தில் எங்களுக்கு இருவரும் தேவை பா.ம.க., கீழ்மட்ட நிர்வாகிகள் உறுதி
மேல்மட்டத்தில் எங்களுக்கு இருவரும் தேவை பா.ம.க., கீழ்மட்ட நிர்வாகிகள் உறுதி
ADDED : ஆக 12, 2025 02:48 AM

பா . ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், பூம்புகாரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடந்த, மகளிர் மாநாட்டு மேடையில், அன்புமணி படம் இடம் பெறவில்லை.
இதேபோல் ராமதாஸ் நியமித்துள்ள நிர்வாக குழு பட்டியலில் அன்பு மணி பெயர் இடம் பெறவில்லை.
ஒமந்துாரில் நடந்த செயற்குழு கூட்டத்தின் மேடையில் வைக்கப்பட்ட பேனரில் அன்புமணி படம் இடம் பெறவில்லை. இந்த அளவிற்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் படத்தை முற்றிலும் புறக்கணித்து வருகிறார்.
அதே சமயத்தில் கடந்த 9ம் தேதி அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ராமதாஸ் படம் இடம் பெற்றிருந்தது. அதே போல் மேடையில் ராமதாசுக்காக தனியாக இருக்கை போடப்பட்டிருந்தது.
ஒரு பக்கம் அன்புமணியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முற்றிலும் ஒதுக்கி வந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் பலர், இன்றளவும், ராமதாஸ் - அன்புமணி படத்தை புறக்கணிக்காமல், கட்சி நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி, காதணி விழா என அனைத்திலும் பிரதானமாக இருவரது படத்தையும் போட்டு விளம் பர படுத்தி வருகின்றனர்.
என்னதான், பா.ம.க., வில் ராமதாஸ் - அன்புமணி மோதல் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் வழக்கம் போல் ஒன்றாக இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.