/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாங்களும் நடத்துவோம்ல... பொதுக்குழுவுக்கு போட்டியாக நகர செயற்குழு கூட்டம்; களமிறங்கிய அன்புமணி ஆதரவாளர்கள்

ADDED : ஆக 19, 2025 12:16 AM
பு துச்சேரி அருகே சங்கமித்ரா திருமண நிலையத்தில், நேற்று முன்தினம் காலை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் நடந்த நேரத்தில், திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் உள்ள திருமண நிலையத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் நகர செயற்குழு கூட்டத்தை நடத்தினர்.
நகர செயலாளர் பிரசாந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர், மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜேஷ், மாநில துணை தலைவர் சம்பத் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கூட்டத்தில், வரும் செப்டம்பர்1 ம் தேதி திண்டிவனத்திற்கு வருகை தரும் அன்புமணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமதாஸ் தரப்பினர் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்திய அதே நேரத்தில், போட்டியாக அன்புமணி ஆதரவாளர்கள் திண்டிவனத்தில் நகர செயற்குழு கூட்டத்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.