/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரியில் பேட்டரி திருடியவருக்கு வலை
/
லாரியில் பேட்டரி திருடியவருக்கு வலை
ADDED : பிப் 11, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே சாலையில் நின்றிருந்த லாரியில் பேட்டரிகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வளவனுார் அருகே ஏ.கே., குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்,47; இவர், தனது லாரியை கடந்த 7ம் தேதி சாலை அகரம் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றார்.
மறுநாள் வந்து பார்த்த போது லாரியில் இருந்த இரு பேட்டரிகள் திருடுபோனது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம். புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.