/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கலைக்கல்லுாரியில் இணைய தள துவக்க விழா
/
அரசு கலைக்கல்லுாரியில் இணைய தள துவக்க விழா
ADDED : செப் 29, 2024 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இணைய தள துவக்க விழா நடந்தது.
கம்ப்யூட்டர் அறிவியல் துறைத்தலைவர் மணவாளன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம், இணைய தளத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதை பயன்படுத்தும் முறை குறித்தும் பேசினார்.
வானுார் ஒன்றிய சேர்மன் உஷா, இணைய தளத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். மாணவி பவதாரணி நன்றி கூறினார்.