/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் கல்வி குழும இல்ல திருமண விழா
/
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் கல்வி குழும இல்ல திருமண விழா
ADDED : ஜூலை 12, 2025 03:47 AM

மயிலம்: மயிலம் அருகே ரெட்டணை ஹோலி ஏஞ்சல் கல்வி குழும இல்ல திருமண விழாவில் பா.ம.க., தலைவர் அன்புமணி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
ஓமந்துார், தனியார் திருமண மண்டபத்தில் டாக்டர்களான, மணமக்கள் இளம்பரிதி, ரீனு திருமண விழாவிற்கு ஏஞ்சல் மெட்ரிக் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், சிங்காநல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் தமிழ்ச்செல்வன், இலக்கியா மணிகண்டன், இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹோலி ஏஞ்சல் கல்வி நிறுவன அறக்கட்டளை இயக்குனர் கீர்த்தி வாசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசுகையில், ' மணமக்கள் பல்லாண்டு வாழ வேண்டும். இந்த சமூகத்திற்கும் மக்களுக்கும் சிறந்ததொரு மருத்துவ சேவையை இருவரும் சேர்ந்து வழங்க வேண்டும். மணமக்களால், ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும்,' என்றார்.
திருமண விழாவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், பா.ம.க., அரசியல் ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன், சிவக்குமார் எம்.எல்.ஏ., பா.ம.க., வடக்கு மாவட்ட தலைவர் கோபால், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன், பா.ம.க., நிர்வாகிகள் நடராஜன், வந்தவாசி முன்னாள் எம்.பி, துரை, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ் செல்வன், சம்பத் என்.எம். கருணாநிதி, செங்கேணி, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், ஜெ.,டி.வி., நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்தராமன், சிவப்பிரகாசம், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி சேதுநாதன், தி.மு.க மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், விழுப்புரம் இ.எஸ்., கல்வி குழும சேர்மன் செல்வமணி, அரவிந்தர் கலை அறிவியல் கல்லுாரி நிர்வாகி நித்தியானந்தம், ஜான் டூயி பள்ளி நிர்வாகி ராபின் சிங், தனியார் பள்ளிகள் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி, மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் டேரேஸ் நாதன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நெடி சுப்ரமணியன், வி.கே., சூப்பர் மார்க்கெட் நிர்வாக இயக்குனர் நீல மேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொறியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.