/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேசும் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பேசும் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜன 13, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர்; குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கிளியனூர் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பேசும் பெருமாள் என்றழைக்கப்படும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் 9ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மாலை 6;00 மணிக்கு, ஸ்ரீமந்நாராயணனுக்கும், ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.