/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் துணை முதல்வருக்கு வரவேற்பு
/
விக்கிரவாண்டியில் துணை முதல்வருக்கு வரவேற்பு
ADDED : நவ 06, 2024 05:49 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வருக்கு விக்கிரவாண்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று 6ம் தேதி நடக்கிறது. துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். இதற்காக நேற்று விழுப்புரம் வருகை தந்தார்.
மாலை 4:40 மணிக்கு விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் அமைச்சர் பொன்முடி தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, எம்.எல்.ஏ.,க்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர்கள் புஷ்பராஜ், இளந்திரையன், நகரமன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசிரவிதுரை, கலைச்செல்வி, சச்சிதானந்தம், வாசன், உஷா முரளி, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு.
ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், ராஜா, முருகன், நகர தலைவர் தண்டபாணி, நகர செயலார் நைனாமுகமது, துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாத், மாவட்ட கவுன்சிலர்கள் மீனா வெங்கடேசன், முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், செல்வம், முகிலன்.
மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அமானுல்லா, வார்டு செயலாளர் அசோக்குமார், நகர பொருளாளர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் விக்கிரவாண்டி,கோலியனுார், காணை, கண்டமங்கலம், வானுார் ஒன்றியங்களிலிருந்து 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.