/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளைஞரணி தொடர் ஓட்ட ஜோதிக்கு திண்டிவனத்தில் வரவேற்பு
/
இளைஞரணி தொடர் ஓட்ட ஜோதிக்கு திண்டிவனத்தில் வரவேற்பு
இளைஞரணி தொடர் ஓட்ட ஜோதிக்கு திண்டிவனத்தில் வரவேற்பு
இளைஞரணி தொடர் ஓட்ட ஜோதிக்கு திண்டிவனத்தில் வரவேற்பு
ADDED : ஜன 19, 2024 11:13 PM

திண்டிவனம் -திண்டிவனத்திற்கு வந்த தி.மு.க., இளைஞரணி மாநாடு தொடர் ஜோதிக்கு, தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலத்தில் நாளை 21ம் தேதி தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு நடக்கிறது. இதற்காக கடந்த 18ம் தேதி சென்னையில் அமைச்சர் உதயநிதி, மாநாட்டுச்சுடர் ஓட்ட ஜோதியை துவக்கி வைத்தார்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல் கேட்டிற்கு வந்த சுடர் ஓட்ட ஜோதிக்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் அமைப்பாளர் ஆனந்தன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
துணை அமைப்பாளர் ரமேஷ், நகர பொருளாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, கவுன்சிலர்கள் லதா சாரங்கபாணி, ரேகா நந்தகுமார், பார்த்திபன், சுதாகர், சரவணன், பரணிதரன், சத்தீஷ், குணசேகரன் பங்கேற்றனர்.
இதேபோல் திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் அருகிலிருந்து நேற்று காலை 8:45 மணியளவில் புறப்பட்ட தொடர் ஓட்ட ஜோதியை, அமைச்சர் மஸ்தான் தலைமையில் தி.மு.க.,வினர் வழியனுப்பி வைத்தனர்.
மாவட்ட அவைத் தலைவர் சேகர், பொருளாளர் ரமணன், துணைச் செயலாளர் ரவிக்குமார், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தன், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, ஒன்றிய சேர்மன்கள் சொக்கலிங்கம், தயாளன், துணைச் சேர்மன்கள் பழனி, ராஜாராம், நகர செயலாளர் கண்ணன், நகர மன்ற தலைவர் நிர்மலா உட்பட பலர் பங்கேற்றனர்.