sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி கோட்டைக்கு வந்த அயலக தமிழர்களுக்கு வரவேற்பு

/

செஞ்சி கோட்டைக்கு வந்த அயலக தமிழர்களுக்கு வரவேற்பு

செஞ்சி கோட்டைக்கு வந்த அயலக தமிழர்களுக்கு வரவேற்பு

செஞ்சி கோட்டைக்கு வந்த அயலக தமிழர்களுக்கு வரவேற்பு


ADDED : ஜன 08, 2024 05:29 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ் செஞ்சி கோட்டைக்கு வருகை தந்த அயலக தமிழர்களின் வாரிசுகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து கல்வி, வேலை வாய்ப்பிற்காக அயல் நாடுகளுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கவும், அவர்களின் வாரிசுகள் தமிழகத்தில், தங்களின் மூதாததையர் வாழ்ந்த பாரம்பரிய நகரங்களை பார்வையிடவும் தமிழக அயலக வாழ் தமிழர் நலத்துறை சார்பில் 'வேர்களைத் தேடி' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் 3வது ஆண்டாக ஆஸ்திரேலியா, கனடா, பீஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 58 பேர் கடந்த மாதம் 27ம் தேதி தமிழகம் வந்தனர்.

மகாபலிபுரத்தில் இருந்து தங்களின் பயணத்தை துவக்கியவர்கள் தமிழகத்தில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களை பார்வையிட்ட பின்னர் நேற்று செஞ்சிக்கு வருகை தந்தனர்.

அவர்களை, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அமைச்சர் மஸ்தான் வரவேற்றார். செஞ்சி கோட்டையின் உச்சி வரை சுற்று பார்த்த குழுவினர் கல்யாண மஹால், நெற்களஞ்சியம், போர் வீரர்களின் குடியிருப்பு உட்பட அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பர்த்தனர். செஞ்சி கோட்டையின் சிறப்புகள், வரலாறு குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை துணை இயக்குனர் ரமேஷ், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us