ADDED : மார் 31, 2025 07:36 AM

கண்டாச்சிபுரம் : முகையூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் கைப்பந்து மைதானம் திறப்பு விழா நடந்தது.
ஆலம்பாடி, சித்தாத்தூர், ஒடுவன்குப்பம், ஒதியத்துார் ஊராட்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒதியத்துாரில் நடந்த நிகழ்ச்சியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னொளி கைப்பந்து மைதானத்தை திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் லுாயிஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜிவ் காந்தி, தொழிலதிபர் ரவிக்குமார், அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெகன், சுலோச்சனா ஏழுமலை, முருகையன், ஜீவானந்தம், சாந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கோபால், குப்புசாமி, மீனாகுமாரி ஏழுமலை, மணிகண்டன், ஊராட்சி தலைவர் சக்திவேல், அமுதாதேவி வீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.