ADDED : ஏப் 06, 2025 05:31 AM

வானுார்,:   வானுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா இளையாண்டிப்பட்டு மற்றும் பொம்பூர் கிராமங்களில் நடந்தது.
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, ஒன்றிய சேர்மன்கள் உஷா முரளி, வாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, அவைத் தலைவர்கள் குப்பன், புஷ்பராஜ், பொருளாளர் மகேஷ், மாவட்ட பிரதிநிதி ஜானகிராமன், விவசாய அணி அமைப்பாளர் சிவபெருமாள், மாவட்ட கவுன்சிலர் அன்புமணி.
துணை செயலாளர்கள் விஸ்வநாதன், வேலாயுதம், கவுன்சிலர்கள் சிவகாமி கருணாநிதி, கவுன்சிலர் முருகன், ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் மஞ்சுளாதேவி, குமுதா, முனியம்மாள், ராணி, மனோகரன், வாசுதேவன், எஸ்.சி., - எஸ்.டி., அமைப்பாளர் செந்தில், நிர்வாகிகள் முத்துவேல், அழகுவேல், வினோத், ஜோதி பிரகாஷ், கிருஷ்ணராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

