/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
/
நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
ADDED : ஜன 03, 2024 12:14 AM

செஞ்சி : விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா செஞ்சியில் நடந்தது.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் முன்னிலை வகித்தார்.
கிளை நிர்வாகி சரவணன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மேல்மலையனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன், வல்லம் ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, நகர செயலாளர் கார்த்திக், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.