ADDED : ஜூலை 19, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : வளத்தியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மேல்மலையனுார் அடுத்த வளத்தியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. .ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.
தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சாந்தி, நாராயணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன், முகாம் கண்காணிப்பு அலுவலர் யாசின், பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி, துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.