ADDED : ஜூலை 09, 2026 03:48 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், ரோட்டரி கிளப் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு. ரோட்டரி முன்னாள் ஆளுநர் பாஸ்கரன் தலைமை தாங்கி, புதிய நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு செய்து வைத்தார்.
புதிய தலைவர் சிவக்குமார், செயலாளர் தீபக்கண்ணன், பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர். உதவி ஆளுநர் ரமேஷ்குமார், நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.
தமிழக அரசின் கலை மற்றும் கலாசாரத்துறை இயக்குநர் பிருந்தாதேவி பாராட்டி பேசினார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ், அ.தி.மு.க., நகர செயலாளர் செங்குட்டுவன், துணைச் செயலாளர் செந்தில், கவுன்சிலர் ராதிகா, ரோட்டரி நிர்வாகக் குழு இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், ராஜிலு, குமரன், புதுராஜா, கந்தன், தியாகராஜன், முத்துசரவணன், சிவதியாகராஜன், ரெட் கிராஸ் மாவட்ட பொருளாளர் சோழன், வழக்கறிஞர் தங்க சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கை கழுவுதற்கான சோப்பு, பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டது.
