/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : ஜூன் 11, 2025 07:05 AM
அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாமை எம்.எல்.ஏ., மஸ்தான் துவக்கி வைத்தார்.
அவலுார்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர், முதிர் கன்னிகள் ஆகியோர்நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் செல்வம் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின் அர்ஷத் முன்னிலை வகித்தனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, நலவாரியம் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து பேசினார்.
பி.டி.ஓ., ஜெய்சங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டுநடந்த மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.