/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சபாஷ்! சொந்த செலவில் குடிநீர் வசதி; டி.வி.,நல்லுார் இளைஞர்கள் அசத்தல்
/
சபாஷ்! சொந்த செலவில் குடிநீர் வசதி; டி.வி.,நல்லுார் இளைஞர்கள் அசத்தல்
சபாஷ்! சொந்த செலவில் குடிநீர் வசதி; டி.வி.,நல்லுார் இளைஞர்கள் அசத்தல்
சபாஷ்! சொந்த செலவில் குடிநீர் வசதி; டி.வி.,நல்லுார் இளைஞர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 22, 2024 11:53 PM

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு4 இடங்களில் மினி டேங்க் அமைக்கப்பட்டு, அதில் 2 மினி டேங்க்கிற்கு மட்டுமே மின் இணைப்பு கொடுத்து பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக அப்பகுதியினர் ஊர் பகுதிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
ஊர் பகுதிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருப்பதால் அப்பகுதியில் கட்டப்பட்டு காட்சிப் பொருளாக மீதமுள்ள 2 டேங்க்கிற்கு மின் இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதனை அதிகாரிகள் கண்டுக் கொள்ளவில்லை.
இதையெடுத்து சில மாதங்களுக்கு முன் அப்பகுதி இளைஞர்கள் பணம் வசூல் செய்து அந்த பணத்தில் காட்சிப் பொருளாக இருந்த ஒரு டேங்க்கிற்குமின் இணைப்பு வழங்கினர்.
ஆனால் ஒரு டேங்க்கிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது அனைத்து குடும்பங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
மேலும் மீதமுள்ள ஒரு மினி டேங்க்கிற்கு மின் இணைப்பு வழங்கி குடிநீர் விநியோகம் செய்யுமாறு மீண்டும் திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர். அதிகாரிகள் வழக்கம் போல் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், அப்பகுதி இளைஞர்கள் மீண்டும் பணம் வசூல் செய்து, அப்பகுதியில் உள்ள ஏரி போர்வெல்லில் இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி புதுமனை தெருவில் மின் இணைப்பு வழங்காமல் காட்சி பொருளாக இருந்த மினி டேங்க்கிற்கு பைப் லைன் அமைத்து இணைப்பு வழங்கினர்.
இது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.மேலும், அப்பகுதி மக்கள் நிரந்தரமாக இடம் தேர்வு செய்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையாவது அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் செவி சாய்ப்பார்களா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.