/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதிமீறல் சரக்கு வாகனங்கள் நடவடிக்கை எப்போது?
/
விதிமீறல் சரக்கு வாகனங்கள் நடவடிக்கை எப்போது?
ADDED : ஆக 20, 2025 12:40 AM

விழுப்புரம் : சரக்கு வாகனங்களில் விதிகளை மீறி பொதுமக்களை ஏற்றி செல்வதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் டாடா ஏஸ் மினி சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லக்கூடாது. ஆனால், இந்த வாகனங்களில் தற்போது அதிகளவில் மக்கள் பயணம் செய்கின்றனர்.
இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் இந்த நிலை நீடித்து வருகின்றது. இதை போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.