/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் யார்? கட்சியினர் மத்தியில் குழப்பம் நீடிப்பு
/
பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் யார்? கட்சியினர் மத்தியில் குழப்பம் நீடிப்பு
பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் யார்? கட்சியினர் மத்தியில் குழப்பம் நீடிப்பு
பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் யார்? கட்சியினர் மத்தியில் குழப்பம் நீடிப்பு
ADDED : ஜூன் 03, 2025 12:16 AM
பா.ம.க.,வில் தற்போது நிலவும் குழப்பம் காரணமாக ராமதாஸ் ஒரு அணியாகவும், அன்புமணி ஒரு அணியாகவும் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கூட்டத்தை நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், அன்புமணி சென்னை, சோழிங்கநல்லுாரில் தனியாக கூட்டம் நடத்தி, ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகள் மீண்டும் தொடர்வார் என அறிவிப்பதும் அடுத்தடுத்து நடந்து வருகிறது.
இருவருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை, விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளராக பாலசக்தி (விழுப்புரம், திருக்கோவிலுார் தொகுதி), வடக்கு மாவட்ட செயலாளராக சிவக்குமார் எம்.எல்.ஏ., (விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம் தொகுதி), கிழக்கு மாவட்ட செயலாளராக ஜெயராஜ் (திண்டிவனம், வானுார் தொகுதி) ஆகியோர் இருந்தனர்.
ஆனால் இவர்கள், ராமதாஸ் மூலம் அதிரடியாக மாற்றப்பட்டனர். மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி (விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதி) நியமிக்கப்பட்டார். ஏற்கனவே மத்திய மாவட்ட செயலாளரான பாலசக்திக்கு விழுப்புரம், திருக்கோவிலுார் தொகுதி இருந்தது. இவர் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதே போல் சிவக்குமார் எம்.எல்.ஏ.,வும் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவரிடமிருந்த விக்கிரவாண்டி தொகுதி, புகழேந்திக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. புகழேந்தி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் சகலை.
இதற்கிடையே சோழிங்கநல்லுாரில் நடந்த கூட்டத்தில், சிவக்குமார் எம்.எல்.ஏ., மீண்டும் மாவட்ட செயலாளராக தொடர்வார். அவருக்கு விக்கிரவாண்டி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதி வழங்கப்பட்டுள்ளது என அன்புமணி அறிவித்தார்.
இதற்கிடையில், சிவக்குமார் எம்.எல்.ஏ.,விடம் இருந்த மயிலம், செஞ்சி ஆகிய தொகுதியை பறித்து, புதிதாக ஒரு மாவட்ட செயலாளரை ராமதாஸ் நியமிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் விழுப்புரம் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள், கட்சியின் நிறுவனர் நியமித்த மாவட்ட செயலாளரை அல்லது அன்புமணி கைகாட்டும் மாவட்ட செயலாளரை ஏற்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.