/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதவை பெண் கத்தியால் குத்தி கொலை; கள்ளக்காதலன் ஆபத்தான நிலையில் 'அட்மிட்' திருக்கோவிலுார் அருகே பயங்கரம்
/
விதவை பெண் கத்தியால் குத்தி கொலை; கள்ளக்காதலன் ஆபத்தான நிலையில் 'அட்மிட்' திருக்கோவிலுார் அருகே பயங்கரம்
விதவை பெண் கத்தியால் குத்தி கொலை; கள்ளக்காதலன் ஆபத்தான நிலையில் 'அட்மிட்' திருக்கோவிலுார் அருகே பயங்கரம்
விதவை பெண் கத்தியால் குத்தி கொலை; கள்ளக்காதலன் ஆபத்தான நிலையில் 'அட்மிட்' திருக்கோவிலுார் அருகே பயங்கரம்
ADDED : டிச 07, 2024 07:53 AM

திருக்கோவிலுார்; திருக்ககோவிலுார் அருகே, விதவை பெண்ணை, கத்தியால் குத்தி கொலை செய்த, கள்ளக்காதலன் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் அடுத்த நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் மனைவி சத்யா,28; கணவரை இழந்த இவர், தனது மகன் ஹரிகரன்,11; மகள் புவனா,3; ஆகியோருடன் திருக்கோவிலுார் அடுத்த மணம்பூட்டி கிராமத்தில் வசித்து வந்தார்.
இவர், அக்கம் பக்கத்து வீடுகளில் வேலை செய்து வந்ததோடு, சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் வேலை செய்து வந்தார். அப்போது, திருப்பாலபந்தலைச் சேர்ந்த முருகன், 50; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், சத்யாவின் மகன் ஹரிகரன் ஏரியில் மூழ்கி இறந்தார்.
நேற்று காலை மணம்பூண்டி, தெய்வீகன் தெருவில் ஒரு வீட்டில், சத்யா வேலை செய்து கொண்டிருந்தார். காலை 8:30 மணிக்கு ஸ்கார்பியோ காரில் வந்த முருகன், சத்யாவை தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த முருகன், தான் வைத்திருந்த கத்தியால், சத்யாவின் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். சத்யாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே, முருகன் காரில் ஏறி தப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த சத்யா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கிராம மக்கள் காரை துரத்தவே, கட்டுப்பாட்டை இழந்த கார், மணம்பூண்டி, போக்குவரத்துக் கழக பணிமனை அருகே மின்கம்பத்தில் மோதி நின்றது. முருகன் கருக்குள்ளேயே மயங்கி கிடந்தார்.
அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப் இன்ஸ்பெக்டர்கள் குருபரன், ரவி மற்றும் போலீசார், முருகனை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை டாக்டர் பரிசோதித்ததில், முருகன் ஏற்கனவே பூச்சி மருந்து குடித்திருப்பது தெரிய வந்தது. உடன் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்யா உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.