ADDED : ஆக 11, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : திருமணமான 2 மாதத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சின்னராசு, 27; இவரது மனைவி லோகேஸ்வரி, 19; கடந்த ஜூன் 8ம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி மாலை 5:30 மணிக்கு கடைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற லோகேஸ்வரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சின்னராசு அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.