/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா?
/
மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா?
மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா?
மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா?
ADDED : மே 06, 2025 05:19 AM
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிக்கு முன்னுரிமை வழங்கும் சிறப்பு கவுன்டர்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிதி கொள்கையின் காரணமாக ரொக்க பரிவர்த்தனைகள் குறைக்கப்பட்டு, வங்கிகள் மூலமாகவும், செயலிகள் மூலமாகவும் பண பரிவர்த்தனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
முதியோர் உதவித்தொகை, ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகள், பென்ஷனர்கள், மகளிர் சங்கங்கள் அனைவரும் வங்கி மூலமாகவே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக புதிய கணக்குகள் துவக்குவது, முடங்கிய கணக்கை விடுவிப்பது, கணக்குகளில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது. கணக்கில் விபரங்களில் திருத்தம் செய்வது, புதிய ஏ.டி.எம்., கார்டு வாங்குவது, தொலைந்த ஏ.டி.எம்., கார்டுகளை பிளாக் செய்வது என வங்கி தொடர்பான பல்வேறு வகை நடவடிக்கைகளுக்காக தினமும் ஏராளமாக வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருகின்றனர்.
மேலும் விவசாய கடன், நகை கடன், கல்விக் கடன், தொழில் கடன் பெறுவதற்கும் தினமும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருகின்றனர். இது போன்று வரும் வாடிக்கையாளர்கள் சில நேரம் நாள் முழுதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளும் வாடிக்கையாளர்களுடன் வரிசையில் நின்று வங்கி பரிவர்த்தனைகளை செய்ய வேண்டி உள்ளது. வயதானவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவு, ரத்த அழுத்த நோய் உள்ளவர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு வங்கியில் கழிவறை வசதியில்லை. இவர்கள் கூட்ட நெரிசலில் பல மணி நேரம் நிற்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக முன்னுரிமை கவுன்டர்களை வங்கிகள் ஏற்படுத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில வங்கிகளில் இதற்கான கவுன்டர்கள் இருந்தாலும் பரிவர்த்தனை செய்ய ஊழியர்கள் இருப்பதில்லை.
எனவே வங்கிகளின் மண்டல அளவிளான உயரதிகாரிகள் வங்கிகளில் ஆய்வு செய்து மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவான சேவை வழங்க முன்னுரிமை கவுன்டர்களை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.