/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இடைத் தரகர்கள் ராஜ்ஜியத்தில் உய்யலாலா... மாவட்ட எஸ்.பி., கவனிப்பாரா?
/
இடைத் தரகர்கள் ராஜ்ஜியத்தில் உய்யலாலா... மாவட்ட எஸ்.பி., கவனிப்பாரா?
இடைத் தரகர்கள் ராஜ்ஜியத்தில் உய்யலாலா... மாவட்ட எஸ்.பி., கவனிப்பாரா?
இடைத் தரகர்கள் ராஜ்ஜியத்தில் உய்யலாலா... மாவட்ட எஸ்.பி., கவனிப்பாரா?
ADDED : ஏப் 22, 2025 04:47 AM

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுப்பவர்களிடம் இடைத்தரகர்கள் செயல்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் பல்வேறு கிராமங்களில் சமீப காலமாக தொடர்ந்து வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதில் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், திருட்டு குறித்து புகார் கொடுக்கச் சென்றால் குறைந்த அளவிலேயே திருடு போய்விட்டது என புகார் எழுதி கொடுக்கும்படி கூறுகின்றனர். திருட்டு வழக்கில் திருடனை கையும், களவுமாக பிடித்து வந்தால் காவல் நிலைய இடைத்தரகர்கள் புகார்தாரரிடம் பேரம் பேசுகின்றனர்.
தகராறு உட்பட பல்வேறு வழக்கு விசாரணை என புகார் தர வருபவர்களிடம் இடைத் தரகர்கள் மூலம் எதிர்மனுதாரர்களிடம் பேரம் பேசி மனுதாரரையே குற்றவாளிகளாக்குகின்ற அவலமும் உள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நடைபெறும் செயல்பாடுகளை கண்காணிக்க எஸ்.பி.,யால் நியமிக்கப்படும் தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்படுகின்றனர்.
ஆனால், சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள செயல்பாடுகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருக்க தனிப்பிரிவு போலீசாரையும் இடைத் தரகர்கள் மூலம் காவல் நிலைய அதிகாரிகள் 'கவனித்து' விடுகின்றனர்.
அதே போன்று டாஸ்மாக் கடைக்கு அருகே பார் நடத்துவர்களிடம் மாத மாமூல் பெற இடைத்தரகர்கள் சென்று வர வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை கொடுத்தனுப்பி வசூல் செய்யப்படுகிறது.
தவறு செய்பவர்களை எஸ்.பி., கண்டறிந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஒரு சில நேர்மையான போலீஸ்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.