/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் இன்றி 2 மாவட்டங்கள்.. தேர்தலுக்கு முன் நியமிக்கப்படுவாரா? உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
/
அமைச்சர் இன்றி 2 மாவட்டங்கள்.. தேர்தலுக்கு முன் நியமிக்கப்படுவாரா? உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
அமைச்சர் இன்றி 2 மாவட்டங்கள்.. தேர்தலுக்கு முன் நியமிக்கப்படுவாரா? உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
அமைச்சர் இன்றி 2 மாவட்டங்கள்.. தேர்தலுக்கு முன் நியமிக்கப்படுவாரா? உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2025 01:22 AM
வி ழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து பொறுப்பு அமைச்சராக வலம் வந்தவர் பொன்முடி. அதன் பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவி வந்த உட்கட்சி பூசலால், வேலு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின், விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் பொன்முடி பொறுப்பு அமைச்சராக இருந்து வந்த நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளராக இருந்து வந்த மஸ்தானுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் 2 அமைச்சர்கள் இருந்து, கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சூழ்நிலையில், மஸ்தான் மற்றும் பொன்முடி இருவர் மீதும் எழுந்த சர்ச்சை காரணமாக பதவியை தலைமை பறித்தது.
இந்த சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சர் வேலும், விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வமும் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டனர்.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்காவது வேலு அடிக்கடி தலையை காட்டி வருகிறார். ஆனால் விழுப்புரம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் பன்னீர்செல்வம், கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் தலையை காட்டுவதும் மற்ற நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் பக்கமே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியினரிடையே உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பொன் முடி, மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா என 4 எம்.எல்.ஏ.,க்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் என 3 எம்.எல்.ஏ.,க்கள் என 7 பேர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இருந்தும் 7 பேரில் ஒருவரை கூட கட்சி தலைமை அமைச்சராக நியமிக்கவில்லை.
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் மாவட்டத்தின் கட்சிப் பணிகளை பார்ப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். பொறுப்பு மாவட்டத்திற்கு எப்படி கட்சி பணியை முனைப்புடன் கவனிக்க முடியும் என்று உடன்பிறப்புகள் கேள்வி எழுப்புகின்றனர்.
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்குமா கட்சி தலைமை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

