/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குப்பை மேடாக மாறிய குடியிருப்பு வளாகம் அரசு வீட்டுவசதி வாரியம் கவனிக்குமா?
/
குப்பை மேடாக மாறிய குடியிருப்பு வளாகம் அரசு வீட்டுவசதி வாரியம் கவனிக்குமா?
குப்பை மேடாக மாறிய குடியிருப்பு வளாகம் அரசு வீட்டுவசதி வாரியம் கவனிக்குமா?
குப்பை மேடாக மாறிய குடியிருப்பு வளாகம் அரசு வீட்டுவசதி வாரியம் கவனிக்குமா?
ADDED : செப் 25, 2024 04:05 AM

விழுப்புரம் : விழுப்புரம், மகாராஜபுரத்தில் பயனற்ற வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், குப்பை மேடாகி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது.
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில், மகாராஜபுரத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், 192 வீடுகள் கட்டப்பட்டன.
இந்த வீடுகள் பராமரிப்பின்றி தற்போது சேதமடைந்ததுள்ளன. இந்த வளாகத்தை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டுவதற்கான திட்டம், கிடப்பில் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, குடியிருப்புகளை ஆய்வு செய்து, கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதுவரை அகற்றப்படவில்லை.
தற்போது இந்த வளாகத்தில் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். இதனால், இப்பகுதி குப்பை சேகரிக்கும் குடோனாக மாறி வருகிறது. மேலும், புதர்கள் மண்டியுள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இப்பகுதியில், இரவு நேரத்தில் போதை ஆசாமிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது.
இந்த பாழடைந்த வீடுகளை அகற்றிவிட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்பு வீடுகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.