/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளையாட்டு போட்டியில் வெற்றி; பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
/
விளையாட்டு போட்டியில் வெற்றி; பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
விளையாட்டு போட்டியில் வெற்றி; பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
விளையாட்டு போட்டியில் வெற்றி; பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : செப் 24, 2024 12:08 AM

விழுப்புரம் ; விழுப்புரத்தில் விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
போட்டியில் பங்கேற்ற, வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தாமரைச்செல்வி, மதுஸ்ரீ, கராத்தே போட்டியில் வெற்றி பெற்றனர். சிலம்பம் போட்டியில் தேவிகா மாநில அளவிலும், தீபிகா, சத்யபிரியா மாவட்ட அளவிலும் பரிசு பெற்றனர்.
மல்லர் கம்பம் போட்டியில் சிந்துஜா மாநில அளவிலும், மகாலட்சுமி மாவட்ட அளவிலும் பரிசு பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சோழன் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்விராஜ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.