ADDED : நவ 23, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த சிங்கனுாரில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சிங்கனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பங்க் கடையில் சோதனை செய்தனர். அதில், ரஞ்சித் குமார் மனைவி யுவராணி, 39; என்பவர் விற்பனைக்காக குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
உடன் 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து யுவராணியை கைது செய்தனர்.