ADDED : அக் 29, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் நேற்று காலை பாவந்துார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவநாராயணன் மனைவி தேவி, 36; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 140 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

