/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ADDED : மே 09, 2025 12:56 AM
விழுப்புரம்: செஞ்சி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி அடுத்த சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி ரத்தினம், 57; இவர், தனது மகன், மருமகள், குழந்தையுடன், நேற்று காலை 10:00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
உடன், அங்கு பணியில் இருந்த தாலுகா போலீசார், அவரை தடுத்து நிறுத்தி மனு அளித்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
சே.பேட்டையில் கூலி வேலை செய்து, வசித்து வருகிறோம். எனது மகன் ராஜேந்திரன், 32; பிளஸ் 2 வரை படித்துள்ளார். அவருக்கு, அரசு பஸ் கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக, எங்கள் ஊரை சேர்ந்த தி.மு.க., பிரமுகரான அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் எங்களிடம் பேசி, 5 லட்சம் ரூபாய் வாங்கினார்.
பணம் வாங்கி 5 ஆண்டுகள் ஆகியும், வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.