ADDED : அக் 21, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மரக்காணம் அடுத்த கோட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி மலர், 50; இவர், கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். கடந்த 14ம் தேதி வலி அதிகமானதால் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை 5:30 மணிக்கு இறந்தார்.
மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.