ADDED : டிச 26, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அருகே உள்ள கன்னியாபுரம் தேசிய நெடுஞ்சாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலம் அடுத்த கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்து கிடந்த நபர் ஆரஞ்சு நிற சேலையில் பிரவுன் கலர் சாட்டையும் அணிந்திருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்த வருகின்றனர்.