/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாஜி படைவீரரின் குடும்ப பெண்கள் பதிவு செய்யலாம்
/
மாஜி படைவீரரின் குடும்ப பெண்கள் பதிவு செய்யலாம்
ADDED : நவ 08, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள், திருமணமாகாத மகள்கள் பதிவு செய்யலாம்.
மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று இலவச தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள், உரிய சான்றுகளுடன் தங்களது பெயரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.

