/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது சந்தை வசதி மையத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
/
பொது சந்தை வசதி மையத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பொது சந்தை வசதி மையத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பொது சந்தை வசதி மையத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 08, 2025 02:13 AM
விழுப்புரம்: சுய உதவிக்குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையத்திற்கு மேலாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், 2025--26ம் ஆண்டு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பொது சந்தை வசதி மையத்திற்கு மேலாளர் மற்றும் கணக்காளர் உதவியாளர் பணியிடங்களுக்கு பணியாளரை தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் செயலாளர், விழுப்புரம் மாவட்ட முகமை, மாவட்ட ஊரக வளர்ச்சி கட்டட வளாகம், கீழ் தளம் என்ற முகவரிக்கு வரும் 18ம் தேதி மாலை 5:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கு, பொருளாதாரம், வணிகம், சந்தைப் படுத்தல் துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும். மேலும், தயாரிப்புகளின் மதிப்பு கூட்டல் பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் வழிகாட்டுதல் வழங்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மதிப்பு கூட்டல் பேக்கிங், பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் லேபிளிங் ஆகியவற்றிற்காக நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் திறன் மிக்கவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

