/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்
/
சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்
சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்
சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்
ADDED : நவ 03, 2024 11:06 PM

செஞ்சி: செஞ்சி அருகே சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்குச் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. மழை பெய்தால் சேறும் சகதியுமாகி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மண் சாலையை தார் அல்லது சிமென்ட் சாலையாக அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை சாலை போட நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.