ADDED : ஜூலை 27, 2025 03:55 AM

விழுப்புரம்:விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில், மாவட்ட நீதிமன்றம் சார்பில், பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மதுரை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.பி., சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில் தலைமை தாங்கி கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் பேசுகையில், ' பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட பொது இடங்களில், பெண் பாதுகாப்பிற்கான அனைத்து வழிகாட்டு முறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வன்முறையில் ஈடுபடுவோர் மீது பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு சட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கை விவரங்களை, தங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் நீதிபதி வினோதா, தேசிய சட்டப்பணிகள் கழக பதிவாளர் பாலகிருஷ்ணன், அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.