/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்டல அளவில் பெண்கள் கபடி போட்டி : அரசு கல்லுாரி சாதனை
/
மண்டல அளவில் பெண்கள் கபடி போட்டி : அரசு கல்லுாரி சாதனை
மண்டல அளவில் பெண்கள் கபடி போட்டி : அரசு கல்லுாரி சாதனை
மண்டல அளவில் பெண்கள் கபடி போட்டி : அரசு கல்லுாரி சாதனை
ADDED : நவ 21, 2024 12:38 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த மண்டல அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியில், அரசு கல்லுாரி மாணவிகள் வென்று சாதித்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் விழுப்புரம் மண்டல அளவில் பெண்களுக்கான கபடி போட்டி கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு திடலில் நடந்த போட்டியை, இங்குள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி பெண்களுக்கான கபடி அணி நடத்தினர். இந்த போட்டியின் துவக்க விழாவில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயக்குமாரி, மாவட்ட அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒருங்கிணைப்பாளர் வாலிபால் மணி, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில், விழுப்புரம் மண்டல அளவில் 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி மாணவிகள் கால் இறுதி, அரை இறுதி போட்டியில் வென்றனர். பின், இந்த அணி, கள்ளக்குறிச்சி அணியை எதிர்கொண்டு 36-33 புள்ளிகளை பெற்றனர். இந்த போட்டியில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி அணி மூன்றாம் இடத்தை பிடித்து வென்றனர்.
மேலும், மண்டல அளவில் வானுார் ஸ்ரீ அரவிந்தர் அரசு மற்றும் கலை கல்லுாரி முதல் இடத்தையும், கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரி 2வது இடத்தை பிடித்தனர்.
வென்ற கபடி பெண்கள் அணி, வரும் 17 ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் மண்டலங்களுக்கு இடையே, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.