/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரகண்டநல்லுாரில் ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம் பணி துவக்கம்
/
அரகண்டநல்லுாரில் ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம் பணி துவக்கம்
அரகண்டநல்லுாரில் ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம் பணி துவக்கம்
அரகண்டநல்லுாரில் ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம் பணி துவக்கம்
ADDED : டிச 10, 2025 06:01 AM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில் ரூ. 3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கு, முதல்வர் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் பேரூராட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அரகண்டநல்லுாரில் அரசு மேல்நிலை பள்ளி அருகே திறந்தவெளி பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணி துவக்க விழா நடந்தது.
பொன்முடி எம்.எல்.ஏ., கலெக்டர் ஷேக்அப்துல்லா ரகுமான் முன்னிலை வகித்து பணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், முகையூர் ஒன்றிய குழு சேர்மன் தனலட்சுமி உமேஷ்வரன், அரகண்டநல்லுார் பேரூராட்சி தலைவர் அன்பு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பிரபு, ரவிச்சந்திரன், ராஜிவ் காந்தி, விஸ்வநாதன், செயல் அலுவலர் தாமோதரன், பி.டி.ஓ., பாலச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

