/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் கொலை வழக்கில் தொழிலாளி சிக்கினார்
/
பெண் கொலை வழக்கில் தொழிலாளி சிக்கினார்
ADDED : ஜன 14, 2025 07:08 AM
விழுப்புரம்: நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளி சிக்கினார்.
விழுப்புரம் அடுத்த, கூடலுார் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சாந்தி, 55; கணவரை இழந்த சாந்தி, மகன் திருநாவுக்கரசுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 11ம் தேதி காலை மாடுகளை வயலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அரை நிர்வாணத்தில், காதில் ரத்த காயத்துடன், தோடு பறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
காணை இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் கொலை வழக்கு பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். அதில், கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதில் குடி போதையில் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாய தொழிலாளி ஒருவர், மது போதையில், மாடுகளை ஓட்டிச் சென்ற சாந்தியிடம் தகராறு செய்தது தெரிய வந்துள்ளது. அதே நபர், தனியாக இருந்த சாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, காதிலிருந்த நகையையும் பறித்துச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரிடம் போலீசார், கொலை சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

