/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை
/
வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை
ADDED : பிப் 02, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி,- விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம், 48; கூலித் தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
பரிசோதனையில் புற்று நோய் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த பஞ்சாட்சரம் அவரது மாமியார் வீடான டி.புதுப்பாளையம் கிராமத்திற்குச் சென்றவர், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தென்பேர் சாலையோர மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

