நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : நெஞ்சு வலி ஏற்பட்டு கூலி தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரை சேர்ந்தவர் குமரேசன், 43; கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக, தனது மனைவி கலாவிடம் கூறினார்.
இதையடுத்து, அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.