ADDED : பிப் 02, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : நடந்து சென்ற தொழிலாளி பைக் மோதி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த வி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 48; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 31ம் தேதி இரவு, வளவனுார் - சிறுவந்தாடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
அதில் படுகாயமடைந்த செல்வத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு, வளவனுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.