/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தண்ணீரில் மூழ்கி தொழிலாளி மரணம்
/
தண்ணீரில் மூழ்கி தொழிலாளி மரணம்
ADDED : மே 21, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
வளவனுார் அருகே மழவராயனுார் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணு மகன் அய்யனார், 42; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள சஞ்சீவிராயர் பெருமாள் கோவில் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் தவறி விழுந்து மாயமானார்.
வளவனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை குளத்தில் தேடியும், உடல் கிடைக்கவில்லை. நேற்று அதிகாலை அய்யனார் உடல் கிடைத்தது. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.