/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி: விவசாயி கைது
/
மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி: விவசாயி கைது
ADDED : நவ 04, 2025 09:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே காட்டு பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்ததால் விவசாயியை, போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த கீழ்வயலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன், 48; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள நிலத்தின் வழியாக சென்றபோது, காட்டுப்பன்றி பயிர்களை சேதமாக்குவதைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இறந்தார்.
புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து மின் வேலி அமைத்த நிலத்தை குத்தகைக்கு பயிரிட்ட கல்லடிகுப்பத்தைச் சேர்ந்த லட்சுமணன், 37; என்பவரை கைது செய்தனர்.

