/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராம வளர்ச்சி திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி
/
கிராம வளர்ச்சி திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி
ADDED : நவ 04, 2025 09:47 PM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ஊராட்சியில் கிராம வளர்ச்சி திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீவானந்தம், மண்டல கூடுதல் பி.டி.ஓ., ரவிசந்திரன், தலைமை ஆசிரியர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய அலுவலர் கலியமூர்த்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களை மகளிர் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் வரைபடம் மூலம் பள்ளி வளாகத்தில் வரைந்தனர். பின் ஊராட்சித் தலைவர், ஊராட்சியின் வளர்ச்சி மற்றும் திட்ட அறிக்கை குறித்து பேசினார்.
வட்டார வளமைய அலுவலர்கள் ஜோஸ்பின், அன்பரசன், சுதாகர், பிரீத்தி, மஞ்சு ஆகியோர் வரைபடம் மற்றும் திட்ட அறிக்கை குறித்து விளக்கினர்.
மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் அனந்தராமன் ஏற்பாடுகளை செய்திருந்தார். வளமைய அலுவலர் ஒலிவியா நன்றி கூறினார்.

