/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு
/
கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு
ADDED : ஏப் 11, 2025 06:16 AM
வானுார்: வானுார் அருகே செயல்படாத கல்குவாரிக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வாலிபர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் சின்ன பாப்பம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் காவேரி, 25; இவர் வானுார் அடுத்த திருவக்கரை பகுதியில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் குடும்பத்தினருடன் தங்கி, டிராக்டர் ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் குவாரியின் மேல் பகுதியில் டிராக்டர் ஓட்டிச்சென்றபோது, பின்பக்கமாக ரிவைஸ் எடுத்துள்ளார்.
அதில் நிலைதடுமாறி பக்கத்தில் செயல்படாமல் இருந்த 100 அடி ஆழமுள்ள பழைய கல்குவாரிக்குள் டிராக்டர் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த காவேரி பலத்த காயமடைந்தார்.
அவரை அங்கிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். புகாரின் பேரில் வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

