/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு '20 ஆண்டு'
/
சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு '20 ஆண்டு'
ADDED : நவ 27, 2024 08:06 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே 4 வயது சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் அடுத்த வளவனுார் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சுப்பரமணியன் மகன் தணிகைவேல், 38; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி, 4 வயது பெண் குழந்தையை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் சைல்டு ஹெல்ப் லைன் ஊழியர் ஜெயசீலி, வளவனுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அதே மாதம் 30ம் தேதி தணிகைவேல் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் 'போக்சோ' வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் சுமதி ஆஜரானார். வழக்கின் விசாரணை முடிந்து, நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், குற்றவாளி தணிகைவேலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து, தணிகைவேல் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.