/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து
/
தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து
ADDED : மே 01, 2025 06:59 AM
கண்டமங்கலம் : விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நவமால் மருதுாரை சேர்ந்தவர் பாஸ்கர், 49; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 28ம் தேதி மதியம் அரியூர் சாராய கடையில் சாராயம் குடித்துவிட்டு அந்த பகுதியில் படுத்து துாங்கினார். மாலை 4:00 மணிக்கு எழுந்த பாஸ்கள், மீண்டும் குடிப்பதற்காக சென்றார். அப்போது தமிழக எல்லைப்பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்த புதுச்சேரி அரியூர் பாரதி நகர் அன்பரசன், 22; செல்வா, 22; ஆகியோருக்கும், பாஸ்கருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அன்பரசன், செல்வா இருவரும், பீர் பாட்டிலால் பாஸ்கரை குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
படுகாயம் அடைந்த பாஸ்கர் அரியூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாஸ்கர் கொடுத்த புகாரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அன்பரசனை கைது செய்தனர்.