ADDED : பிப் 01, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நிலத்தில் அறுந்துகிடந்த ஒயரில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி, 50; இவர், மேல்பாதி கிராமத்தில், ஜீவானந்தம் என்பவரின் கரும்பு தோட்டத்தில் காவலராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது, மின் மோட்டார் சுவிட்சை போட்டுவிட்டு, தண்ணீர் குழாயை திறக்க சென்றபோது, அங்குள்ள நிலத்தில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல், வீரமணி மிதித்துள்ளார். அதில் மின்சாரம் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.