ADDED : டிச 04, 2024 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி.மேலக்கொந்தையைச் சேர்ந்தவர் சகாதேவன், 60; கூலித் தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை ரயில் நிலையம் எதிரே சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே சகாதேவன் இறந்தார்.
புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.