UPDATED : அக் 21, 2026 04:58 PM
ADDED : அக் 21, 2026 04:54 PM

விக்கிரவாண்டி: டாட்டா ஏஸ் வேன் மீது பைக் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பத்தை சேர்ந்தவர் ருத்திரகுமார், 48; கூலி தொழிலாளி. இவர் கடந்த, 16 ம் தேதி மாலை 5:00 மணிக்கு தனது பைக்கில் உறவினர் தீவனுாரை சேர்ந்த தீபா, 46; என்பவரை ஏற்றிக்கொண்டு விழுப்புரத்திலிருந்து கஞ்சனுார் நோக்கி சென்றார்.
வேம்பி அரசு மருத்துவமனை அருகே, முன்னால் சென்ற டாட்டா ஏஸ் வேன் திடீரென ராயல் சிட்டி நகருக்குள் திரும்பியது. இதனால் பின் தொடர்ந்து சென்ற பைக் எதிர்பாராத விதமாக வேன் பின்னால் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ருத்திரகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு இறந்தார். தீபா சிகிச்சை பெற்று வருகிறார். கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
