/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளி கொலை வழக்கு; : 4 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு
/
தொழிலாளி கொலை வழக்கு; : 4 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு
தொழிலாளி கொலை வழக்கு; : 4 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு
தொழிலாளி கொலை வழக்கு; : 4 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு
ADDED : ஏப் 24, 2025 07:16 AM

விழுப்புரம் : பிரம்மதேசம் அருகே குவாரி தொழிலாளி கொலை வழக்கில் 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேம்பன் மகன் மணிகண்டன், 31; குவாரி தொழிலாளி. இவருடன் குவாரியில் வேலை செய்த மரக்காணம் வடகொளப்பாக்கம் பாலு, 45; பெருமுக்கல் பாலா,26; வாசு, 26; பாலகிருஷ்ணன், 35; ஆனந்தன்,30; மணிகண்டன், 30; பிரம்மதேசம் மோகன், 32; தேவநாதன், 30; செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டம் பாலமுருகன், 30; ஆகியோருக்கும் இடையே, கடந்த 2018ம் ஆண்டு, பணம் கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் ஏற்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி இரவு, பெருமுக்கல் கிராம சேவை மைய வாசலில் அமர்ந்திருந்த மணிகண்டனிடம் பாலு தரப்பினர், பணம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. அப்போது பாலு, பாலா உள்ளிட்டோர் சேர்ந்து, மணிகண்டனை வெட்டி கொலை செய்தனர்.
பிரம்மதேசம் போலீசார், கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், பாலா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி.எஸ்.டி., வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, வாசு இறந்து விட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட பாலு, பாலா, பாலமுருகன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து,
நேற்று தீர்ப்பளித்தார். மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். அரசு வழக்கறிஞர் சஞ்சய்காந்தி ஆஜரானார்.